பிரித்தானியாவில் இலங்கை தமிழர் கொடூரமாக படுகொலை!
பிரித்தானியாவில் ஹாரோ தென் பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நாற்பது வயதான இலங்கை தமிழரான விமல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த சந்தேகநபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்கான நபர் மீ ட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,
இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும். இந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை.
வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை” என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..