Main Menu

பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தம் – பயணிகள் அசௌகரியம்

பிரான்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பணிநிறுத்தம் காரணமாக, விமானப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்துறை நடவடிக்கை இன்றும் நீடித்து வருகிறது.

பணி நிலைமைகளை சீர்த்திருத்தும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச ஊழியர்கள் தேசிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலேயே விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பணிநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிரிட்டிஸ் எயார்வேஸ், ரயன்எயர், ஈசிஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் தங்களது விமானசேவைகளை ஏற்கனவே நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares