Main Menu

பரிஸ் : உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மோதல்: ஏழு பேர் கைது

உதைபந்தாட்ட கழக ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று நவம்பர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

stade Charléty அரங்கில் நேற்று இரவு Paris FC மற்றும் Rodez அணிகளுக்கிடையே லீக் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. இந்த போட்டி முடிவிலேயே இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஏழு பேர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்படுள்ளனர்.

பகிரவும்...
0Shares