படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி
பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து தூங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காட்சிகளில் சிறுமி பாம்புகளை கட்டிப்பிடித்தபடி தூங்குகிறாள். பாம்புகள் அவளது உடலை சுற்றியபடி நெளிவது நம்மை பதற வைக்கின்றன. ஆனால் அந்த சிறுமியோ எந்த பதட்டமும் இல்லாமல் பாம்பை அரவணைத்தபடி தூங்குவது நிஜமாகவே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 62 ஆயிரம் பேர் இதை பகிர்ந்துள்ளார்கள். பலர் இதுகுறித்து ஆச்சரியப்பட்டு கருத்து தெரிவித்து உள்ளனர்.