Sat. Apr 20th, 2019

நயனுக்கு கவலை ஏற்படுத்திய ‘ஐரா’

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா பல வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்த வந்த நிலையில், அண்மையில் வெளியான ‘ஐரா’ படம் பெரும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நயன்தாரா, கவலையிலுள்ளதாகவும் சினிதா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஐரா’ படத்தில் நயன்தாரா இரு வேடத்தில் நடித்திருந்தார். ஆகையால் இப்படம் மேலும் வரவேற்பை பெற்றுக்கொடுக்குமென எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாறு தோல்வியை தழுவியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் பூர்த்தி செய்யவில்லையென பரவலாக பேசப்படுகின்றது.

‘ஐரா’ படம் கடந்த 29 ஆம் திகதி திரையில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: