Main Menu

தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து – 3 பேர் படுகாயம்

தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலை நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 27 வயது சிரிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 2014 இல் ஜேர்மனிக்குள் நுழைந்த பின்னர் அகதி அந்தஸ்து பெற்றார் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சனை காணப்பட்டதாகவும் ஜேர்மன் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...
0Shares