Main Menu

துயர் பகிர்வோம் – திரு. தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் (01/03/2019)

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்கள் (முன்னாள் உஷா மெசின் கொம்பனி கிளைப் பொறுப்பாளர்)  27ம் திகதி பெப்ரவரி மாதம்  (27-02-2019) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரபூபதி (செல்லக்கண்டு) அவர்களின் அன்புக் கணவரும், துஷ்யந்தன், துஷ்யா, துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரசுதா, நந்தகுமார், குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இராசையா, இரத்தினம், தில்லைராசா, சுந்தரலிங்கம் மற்றும் பொன்னுத்துரை (கனடா), இராசதுரை (இலங்கை), நல்லநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், புவனேஸ்வரன் (ராசா- ஜேர்மனி), கனகேஸ்வரன்(கண்டு- இலங்கை), சந்திரவதனி (குஞ்சு- நெதர்லாந்து), கமலேஸ்வரன்(பிரான்ஸ்), சந்திரேஸ்வரன்(பிள்ளையார்- டென்மார்க்), சந்திரலீலா(சுவீடன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சந்தோஷ், சகீரா, ஜமீனா, சமீரா, சஞ்ஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get Direction Thursday, 07 Mar 2019 12:45 PM – 2:00 PM
Hauptfriedhof
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

தொடர்புகளுக்கு
சந்திரபூபதி : 0049 2089415034

துஷ்யந்தன் : 0049 1797807286

துஷ்யா : 0049 17681331530

அன்னாரின் பிரிவுத்துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து கொள்கிறோம்.