Main Menu

துயர் பகிர்வோம் – திருமதி. தனலட்சுமி நவரத்தினம் (25/02/2025)

யாழ்.வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் நல்லூர் கல்வியங்காடு திருநெல்வேலி பெருமாள் கோவிலடியை வதிவிடமாகவும் தற்போது இல.92 சேர்விஸ் வீயை (சிவன் கோவிலடி) வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனலட்சுமி நவரத்தினம் அவர்கள் இன்று (25/02/2025) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா நவரத்தினம் (கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற இரத்தினம் பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலம் சென்ற கந்தையா கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலம் சென்றவர்களான சண்முகலிங்கம், புஷ்பவதி, மகாலிங்கம் மற்றும் தனபாலசிங்கம், இராசகோபால் ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலம் சென்றவர்களான விக்கினேஸ்வரன் (விக்னா) விக்னராஜன் (சூட்) மற்றும் நந்தினி (பிரான்ஸ்) விஜிதான் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,மற்றும் சற்சுதன், வத்சலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், எழில்நிலா, அருண்நிலா, ஈழக்குமரன், கவிநயா, தருணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், எழிலனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் புதன்கிழமை (26/02/2025) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பி.ப.1.00மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
சிவகாந்தன் (மருமகன்) 0773838848
ஜீவகாந்தன் (மருமகன்) 0774955185

இல.92 சேர்விஸ் வீதி
கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி

இப்பிரிவு துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

பகிரவும்...
0Shares