தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடிய ஒளிப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். இதன்போது அவரும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பார்.
அந்தவகையின் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகக்கவசம் அணிந்து, நுழைவாயிலுக்கு பின்னால் நின்று, ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, குடும்பத்துடன் பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகையை ரஜினி கொண்டாடியுள்ளார்.
இந்த ஒளிப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது சமூக வலைத்தல பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.