Main Menu

பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக மோசமான சூறாவளி – உயிரிழப்பு 67 ஆக உயர்வு

இந்த ஆண்டு பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக மோசமான சூறாவளி காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தால் வடக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும் அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

அதன்படி ககாயனில் இருபத்தி இரண்டு, தெற்கு லூசனில் 17, மெட்ரோ மணிலாவில் எட்டு, மேலும் இரண்டு பிராந்தியங்களில் 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு வாம்கோவால் பிராந்தியத்தில் 12 பேர் இன்னும் காணவில்லை என்றும் கிட்டத்தட்ட 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 45 ஆண்டுகளில் எங்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுதான் என ககாயன் ஆளுநர் மானுவல் மாம்பா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகின் மிக சக்திவாய்ந்த வாம்கோ மற்றும் சுப்பர் டைபூன் கோனி உட்பட நான்கு வார காலப்பகுதியில் ஆறு சூறாவளிகள் பிலிப்பைன்ஸைத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...