திருமண வாழ்த்து – வினோத் & மயூரி (13/09/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் லோகநாதன் ஜெயமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் விநோத் அவர்களும், தாயகத்தில் அச்சுவேலியை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் சதாசிவம் ஜெயந்திமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வி மயூரி அவர்களும் கடந்த 11 ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை ஜேர்மனி Hamm காமாட்சி அம்மன் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.
11 ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட வினோத் & மயூரி தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா,மாமா, மாமி, அக்கா வக்சலா, மைத்துனர் மயூரன், அண்ணா ஜனார்த்தன், தம்பி ஜெயூரன், சித்தப்பாமார் ,சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், அண்ணன்மார், அக்காமார், தம்பிமார்,மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பார் போற்றும் தம்பதிகளாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
திருமண பந்தத்தில் இணைந்த விநோத்&மயூரி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர்கள் ஜனார்த்தன், வக்சலா
அவர்கள் இருவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றி
திருமண வாழ்த்து – வினோத் & மயூரி
இந்நாள் நன்நாள்
இனியதோர் பொன்நாள்
இரு இதயங்கள் இணையும் நாள்
இனிய வாழ்க்கை தொடங்கும் நாள்
மங்களம் இன்று முழங்கும் நாள்
மலர்மாலைகள் அணியும் நாள்
குங்குமம் சூடும் நாள்
குதூகலம் காணும் நாள்
தெய்வங்களை சாட்சி வைத்து
தெய்வீக வாழ்க்கை தொடங்கும் நாள்
இருமனமும் இணைந்து கொள்ள இறைவன் எழுதி வைத்த நாள்
நாதஸ்வரம் இசை முழங்க
நம் தமிழின் வழி துலங்க
ஊர் ஊறவுகளின் வாழ்த்தொலி முழங்க
இணைந்த தம்பதிகள் இல்லறத்தை தொடங்கும் நாள்
தினந்தோறும் மகிழ்ந்து திரவியங்கள் பல கண்டடைந்து தெய்வீகத் தம்பதிகள் வளர்பிறையாய் வாழ்ந்து கொள்ள வாழ்த்துரைக்கும் உங்கள் திருமண நாள்
வாழ்வுறுங்கள் வளம்பெறுங்கள்
காலமெல்லாம் மகிழ்வுறுங்கள்
உண்மையுள்ள தம்பதிகள் நீங்கள் என்று
ஊர்உலகம் போற்ற நீடூழி வாழ்ந்திருங்கள்
இனிய தம்பதிகளை மஞ்சள் குங்குமத்தோடு மகிழ்ச்சியே உயர்ச்சி என்று
மங்களமாய் வாழ்ந்திருக்க மலர்தூவி
வாழ்த்துகிறோம் நீடூழி வாழ இத்தினத்தில் நாங்களும் பேரன்பால் வாழ்த்துகிறோம்.
-பேரன்பு கொண்ட உறவுகள்.