திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.
தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த கேமாதி மாரிமுத்து சாதனைப்படைத்தார். அவருக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கேமாதி மாரிமுத்து தனது தாயாருடன் சந்தித்தார். அப்போது கோமதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஸ்டாலின் வழங்கினார்.
இந்த சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த கோமதி, தன்னை விட வறுமையில் பலர் இருப்பதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு உதவினாலே தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார்.