தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2017 முதல் 13.4.2018 வரை)
மேஷ ராசி அன்பர்களே!
வெளிநாடு செல்வீங்க! போட்டியில் வெல்வீங்க!
குடும்பத்தினர் மீது பாசமிக்க மேஷ ராசி அன்பர்களே!
ஹேவிளம்பி ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ம் இடமான கன்னி ராசியில் வக்ரமாக உள்ளார். செப்.1ல் 7-ம் இடமான துலாம் ராசிக்கு மாறும் குரு பிப்.13 வரை அங்கு இருப்பார். அதன் பிறகு 8-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராகு 5-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜூலை 26ல் கடகத்திற்கு மாறுகிறார். கேது 11-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 10-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். சனி ராசிக்கு 8ல் இருக்கிறார். அவர் டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஏப்ரல் 14 – ஜூலை 31
குருவின் பார்வையால் வருமானம் உயரும். கணவன், -மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சுப நிகழ்ச்சிகள் விடாமுயற்சியால் கைகூடும். வீடு, மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவிப் போகலாம். அரசியல்வாதிகள் பலன் எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். விவசாயிகளுக்கு மானாவாரி பயிர் மூலம் மகசூல் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும்.
ஆகஸ்ட்1 – 2018 ஜனவரி 31
குருவால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர்.
2018- பிப்ரவரி 1 – ஏப்ரல் 13
மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். திருமணம் போன்ற சுபவிஷயம் தள்ளிப் போகலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். குருவின் 5-ம் பார்வையால் வருமானத்திற்கு குறைவிருக்காது. கலைஞர்கள் எதிர்பார்த்த ஒப்பந்தம் பெறுவதில் தாமதமாகும். அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவை. விவசாயிகளுக்கு மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர்.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை. சனீஸ்வரருக்கு எள் தீபம். செல்ல வேண்டிய கோவில் திருச்செந்துார் முருகன்.
பிரிந்த குடும்பம் சேருது! தொழிலில் லாபம் கூடுது!
தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
குரு 5-ம் இடமான கன்னி ராசியில் வக்கிரமாக இருக்கிறார். அவர் செப்.1ல் 6-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் 7-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராகு 4-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜூலை 26ல் 3-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 10ம் இடமான கும்பத்தில் உள்ள கேது ஜூலை 26ல் 9-ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். சனி பகவான் 7-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரக நிலையின் அடிப்படையில் பலனை காணலாம்.
ஏப்ரல் 14- – ஜூலை 31
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வீடு, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.குருவால் தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். பணியில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சனிபகவான் சாதகமற்று இருப்பதால் அலைச்சல், வெளியூர் பயணம் ஏற்படலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்களுக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரம் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி பெறுவர்.
ஆகஸ்ட் 1- – 2018 ஜனவரி31
பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரிகள் பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெற வாய்ப்புண்டு. தொண்டர் வகையில் பணம் செலவாகும். மாணவர்கள் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கப் பெறுவர். ஆசிரியர் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவர். நிலப்பிரச்னைக்கு சுமூகத்தீர்வு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். ஆடை, ஆபரணம் சேரும். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.
2018 -பிப்ரவரி -1 – ஏப்ரல் 13
சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி விமரிசையாக நடந்தேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ராசிக்கு எட்டில் சனி இருப்பதால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் அதற்குரிய நற்பலன் கிடைக்கும். கலைஞர்கள் பாராட்டு, விருது கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர். மாணவர்கள் சீரான வளர்ச்சி பெறுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர், ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு. செல்ல வேண்டிய கோவில் திருச்சி உச்சிப்பிள்ளையார்.
புத்தி கூர்மையுடன் பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!
பணமழை பொழியும்! பொன், பொருள் சேரும்
ஆண்டின் தொடக்கத்தில் 4-ம் இடமான கன்னி ராசியில் உள்ள குரு, செப்.1ல் துலாம் ராசிக்கு மாறுகிறார். அதன் பின் 2018 பிப்.13ல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராசிக்கு 3ல் உள்ள ராகு ஜூலை 26ல் 2-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். கேது 9-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 8-ம் இடத்திற்குச் செல்கிறார். ராசிக்கு 6ல் இடமான விருச்சிகத்தில் உள்ள சனிபகவான் டிச. 18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14- – ஜூலை 31
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு நிலைக்கும். சுப விஷயத்தில் விடாமுயற்சி தேவைப்படும். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சனிபகவானின் 10ம் இடப்பார்வையால் மழை போல பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பணியாளர்கள் வேலைப்பளுவைச் சந்திப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் தீவிர முயற்சியால் புதிய ஒப்பந்தம் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.
ஆகஸ்ட்- 1 – 2018 ஜனவரி 31
குருபகவான் 5ம் இடத்தில் இருப்பதால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தேறும். அதிர்ஷ்டவசமாக பொருளாதார வளம் பெருகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் பெருகும். பங்குதாரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக பெண் கலைஞர்களின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். விவசாயத்தில் உழைப்புக்கேற்ப மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் வரும். வழக்கு, விவகாரத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்
ஏற்படலாம்.
2018 பிப்ரவரி-1 – ஏப்ரல்13
குடும்ப பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபவிஷயத்தில் தடை குறுக்கிடலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. தொழிலில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் பெறுவர். அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனடைவர். வழக்கு, விவகாரம் சுமாராக இருக்கும். பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர்.
பரிகாரம்: சனிக்கிழமை நவக்கிரக வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு. செல்ல வேண்டிய கோவில் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி.
கடமையில் கண்ணாக இருக்கும்கடக ராசி அன்பர்களே!
கொஞ்சம் அலைச்சல் கொள்ளை ஆதாயம்
குரு பகவான் 3-ம் இடமான கன்னி ராசியில் இருந்து செப்.1ல் துலாமிற்கு மாறுகிறார். 2018 பிப்.13ல் அங்கிருந்து விருச்சிகம் செல்கிறார். ராகு 2-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜூலை 26ல் உங்கள் ராசிக்கு வருகிறார். கேது 8-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 7-ம் இடமான மகரத்திற்கு வருகிறார். சனி 5-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14 – ஜூலை 31
குரு சாதகமற்று இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை ஏற்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர் வகையில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் வரும். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். ஆனால், கொஞ்சம் அலைச்சல் இருப்பதை தவிர்க்க முடியாது. கலைஞர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல விளைச்சல் காண்பர். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.
ஆகஸ்ட் 1 – 2018 ஜனவரி 31
குடும்பத் தேவைகள் ஓரளவு நிறைவேறும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. ராகுவால் வீண் அலைச்சல், முயற்சியில் தடை ஏற்படலாம். சுபவிஷயத்தில் தடைகள் ஏற்பட்டு விலகும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையைசந்தித்தாலும்வருமானத்திற்குகுறைவிருக்காது. தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் உண்டாகும். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம். விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத் தான் இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.
2018- பிப்ரவரி 1 – ஏப்ரல் 13
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வசதியான வீட்டிற்கு குடிபுகும் யோகமுண்டு. சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தற்போது தொடங்கலாம். மாணவர்கள் கடந்த ஆண்டை விட கூடுதல் மதிப்பெண்கள் பெறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர். கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலன் காண்பர். விவசாயிகள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். பெண்களால் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள்.
பரிகாரம்: பெருமாளுக்கு நெய்தீபம். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம். செல்ல வேண்டிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
வெற்றி சிகரத்தை குறிக்கோளாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
வளர்ச்சி வந்தாச்சு! வசந்தம் பிறந்தாச்சு!
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 2-ம் இடமான கன்னியில் உள்ள குரு, செப்.1ல் 3-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இங்கிருந்து அவர் 2018 பிப். 13ல் 4-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ராசியில் உள்ள ராகு, ஜூலை 26ல் இடம் மாறி 12-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். 7-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் 6-ம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். தற்போது 4-ம் இடத்தில் இருக்கும் சனி, டிச. 18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.
ஏப்ரல் 14 – ஜூலை 31
குருவால் பொருளாதாரம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன்-, மனைவி இடையே அன்பு நிலைக்கும்.வாழ்வில் வசந்தம் வீசும் வளர்ச்சியான காலகட்டமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.
ஆகஸ்ட் 1 – 2018 ஜனவரி 31
பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வகையில் சலுகை எதிர்பார்க்க முடியாது. பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வளர்ச்சி பெறும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிப்பர். மாணவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். விவசாயிகள் நிலக்கடலை, கிழங்கு வகைகளில் நல்ல மகசூல் காண்பர். கைவிட்டு போன சொத்து மீண்டும் கிடைக்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு பாடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
2018 பிப்ரவரி 1 –- ஏப்ரல் 13
குடும்பத்திற்கு தேவையான வசதி கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை உண்டாகும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரை பயன் உள்ளதாக அமையும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.
பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு.பவுர்ணமியன்று கிரிவலம். செல்ல வேண்டிய கோவில் திருக்கடையூர் அபிராமி அம்மன்.
கடமையை உயிராக மதித்து நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!
புன்னகை மலரும் புதுவாழ்வு கிடைக்கும்
ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் இருக்கும் குரு பகவான், செப்.1ல் 2-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் 3-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு, ஜூலை 26ல் 11-ம் இடமான கடகத்திற்கும் செல்கிறார். 6-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் 5-ம் இடமான மகரத்திற்கு வருகிறார். ராசிக்கு 3ல் உள்ள சனி, டிச.18ல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14- – ஜூலை 1
பணப்புழக்கம் சீராக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெற்றிப் புன்னகையுடன் புதுவாழ்வு அமையப் பெறுவீர்கள். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். குருவின் பார்வை பலத்தால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். பணியாளர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். பணிச்சுமையைச் சந்தித்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். வழக்கமான சம்பள உயர்வு, சலுகை கிடைப்பதில் தடை இருக்காது. தொழில், வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய தொழிலில் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற, சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கப் பெறுவர். பெண்களுக்கு பிள்ளைகள் வழியில் சந்தோஷம் உண்டாகும்.
ஆகஸ்ட் 1 – 2018 ஜனவரி 31
குருபலத்தால் மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். முயற்சியில் இருந்த தடை விலகும். ஆடம்பர வசதி மேம்படும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். உறவினரால் உதவி உண்டு. தடைபட்ட திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். மாணவர்கள் தேக்கநிலை மாறி வளர்ச்சி காண்பர். சிலருக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் நவீன இயந்திரம் மூலம் பணியை மேம்படுத்துவர். புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
2018 -பிப்ரவரி 1 – ஏப்ரல் 13
குடும்பத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். கணவன்-, மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறுக்கிடலாம். செலவு அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் அடிக்கடி பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் சீரான விளைச்சல் காண்பர். குறிப்பாக நெல், சோளம், போன்ற பயிர்கள் மூலம் அதிக வருமானம் காணலாம். பெண்கள், உறவினர் வகையில் விட்டு கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: பவுர்ணமியன்று அம்மன் வழிபாடு. வெள்ளியன்று காளியம்மனுக்கு எலுமிச்சை தீபம். செல்ல வேண்டிய கோவில் விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர்
தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவும் துலாம் ராசி அன்பர்களே!
காலம் கனிஞ்சாச்சு! கல்யாண ஊர்வலத்துக்கு!
உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னியில் இருக்கும் குரு செப். 1ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். 11-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு ஜூலை 26ல் 10-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். ராசிக்கு 5-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் 4-ம் இடமான மகரத்திற்கு வருகிறார். சனிபகவான் ராசிக்கு 2-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார்.
ஏப்ரல் 14 ஜூலை 31
குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு அடிக்கடி காரசாரமாக நடக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செலவு அதிகரிக்கும். கணவன்,-மனைவி இடையே அன்பு நீடிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பண விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கலைஞர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. விவசாயிகளுக்கு கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் வீண்விவாதத்தில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
ஆகஸ்ட் 1– 2018 ஜனவரி 31
குருவின் பார்வையால் குடும்பத்தில் நன்மை பெருகும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே வளர்ச்சி காண முடியும். விவசாயிகள் உழைப்புக்கேற்ப பலன் கிடைக்கப் பெறுவர். பணப்பயிர்களில் முதலீடு செய்ய வேண்டாம். வழக்கு விவகாரம் சுமாராக இருக்கும்.பெண்கள் குழந்தைகளுக்காக பாடுபட வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
2018 பிப்ரவரி 1 – ஏப்ரல் 13
பொருளாதார வளம் சிறக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பணியாளர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியான போக்கு காணப்படும். லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர் மத்தியில் செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். சிலர் படிப்பு, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய நிலம் வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரத்தில் சுமூகத்தீர்வு கிடைக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிறந்த வீட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர், ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு. செல்ல வேண்டிய கோவில் காஞ்சி காமாட்சி அம்மன்.
லட்சிய உணர்வுடன் செயலாற்றும் விருச்சிக ராசி அன்பர்களே!
சனீஸ்வரர் சோதிப்பார் குரு சாதிக்க வைப்பார்
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 11ல் உள்ள குரு, செப்.1ல் 12-ம் இடமான துலாம் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து அவர் 2018 பிப்.13ல் உங்கள் ராசிக்கு வருகிறார். ராசிக்கு 10-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜூலை 26ல் 9-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். கேது 4-ம் வீடான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 3-ம் இடமான மகரத்திற்குச் செல்கிறார். ஜென்ம ராசியில் இருக்கும் சனி, டிச.18ல், 2ம் இடமான தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14 – ஜூலை31
ஏழரைச் சனி காலம் என்பதால் பின்னடைவு ஏற்பட்டாலும் குருவால் தடைகளை முறியடித்து சாதனை படைப்பீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வசதியான வீட்டிற்கு குடி புகும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி விடாமுயற்சியால் நடந்தேறும். பணியாளர்களுக்கு சலுகை ஓரளவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். குருவின் பலத்தால் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் தாராளமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் முன்னேற்றமான பலன் காண்பர். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.
ஆகஸ்ட்-1 – 2018 ஜனவரி 31
குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.தொழில், வியாபாரத்தில் ஆதாயம் படிப்படியாக உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். போட்டியாளர் வகையில் குறுக்கீடு உருவாகலாம். கலைஞர்கள் பலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெறுவர். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர்.
2018 பிப்ரவரி- 1 – ஏப்ரல் 13
குருவின் பார்வை பலத்தால் நன்மை மேலோங்கும். கணவன், -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். திருமணம் போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடலாம். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்கலாம். ஆனால், வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீட்டை தவிர்க்கவும். லாபம் சுமாராக இருக்கும். கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. ஆசிரியரின் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை தேவை.
பரிகாரம்: பிரதோஷத்தன்று சிவன், வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு. செல்ல வேண்டிய கோவில்மதுரை மீனாட்சியம்மன்.
தனக்கென தனி முத்திரை பதிக்கும் தனுசு ராசி அன்பர்களே!
விட்டுக் கொடுத்து போங்க! விடாமுயற்சி பண்ணுங்க!
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 10ம் இடத்தில் உள்ள குரு, செப்.1ல் துலாம் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் குரு 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராசிக்கு 9-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜூலை 26ல் 8-ம் இடமான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். ராசிக்கு 3-ம் இடத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் 2-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். தற்போது 12-ம் இடமான விருச்சிகத்தில் உள்ள சனி டிச.18ல் உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பலனைக் காண்போம்.
ஏப்ரல் -14 – ஜூலை 31
குடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். முயற்சியில் தடை குறுக்கிடலாம். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். கணவன்-, மனைவியிடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். விட்டுக் கொடுத்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். சிலர் விரும்பாத இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் ஓரளவு முன்னேற்றம் காண்பர். விவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல் கிடைக்கும். கேதுவால் வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. பெண்கள் குடும்பத்தோடு ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர்.
ஆகஸ்ட் 1 – – 2018 ஜனவரி 31
குடும்பத்தினருக்காக எதிலும் விட்டுக் கொடுப்பது நன்மையளிக்கும். விடாமுயற்சி செய்தால், வசதியான வீட்டுக்கு குடிபுக வாய்ப்புண்டு. சுபவிஷயத்தில் தடை குறுக்கிட்டு விலகும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவால் ஓரளவு சலுகை கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபார விஷயமாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேரிடும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்கள் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் காண்பர். விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் காண்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.
2018 பிப்ரவரி-1 – ஏப்ரல் 13
குடும்பத்தில் வீண் செலவு அதிகரிக்கும். கணவன்-, மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க நேரிடும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், நிர்வாகச் செலவு அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை கிடைக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம் பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: ராகுவுக்கு பாலபிஷேகம். பெருமாளுக்கு துளசி அர்ச்சனை. செல்ல வேண்டிய கோவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்
உதவும் மனப்பான்மை கொண்ட மகர ராசி அன்பர்களே!
பொன்னான காலம் முன்னேற்றம் சேரும்
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 9ல் உள்ள குரு, செப்.1ல் 10-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அவர் 2018 பிப்.13ல் 11-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். 8-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜூலை 26ல் 7-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். 2-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜூலை 26ல் உங்கள் ராசிக்கு வருகிறார். ராசிக்கு 11ம் இடமான விருச்சிகத்தில் உள்ள சனி டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்.14 – ஜூலை 31
பொற்காலம் என்ற அளவுக்கு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சியில் வெற்றி உண்டாகும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதிய வீடு-மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்கள் புகழ், பாராட்டு பெற்று மகிழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர். விவசாயிகள் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு வருமானம் அடைவர். பெண்கள் வாழ்வில் குதுாகலம் காண்பர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
ஆகஸ்ட் -1 – 2018 ஜனவரி 31
குரு சாதகமற்று இருப்பதால் தடைகள் குறுக்கிடலாம். ஆனால் அதை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பொன், பொருள் சேரும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். விடா முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். கடந்த கால உழைப்பின் பயனாக சீரான ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் விடாமுயற்சியால் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு இன்றி உழைக்க நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் உழைப்பிற்கேற்ப வருமானம் காண்பர். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
2018- பிப்ரவரி-1 – ஏப். 13
குருவின் பலத்தால் சமூக மதிப்பு உயரும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்-, மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் இனிதே நடந்தேறும். பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் பதவி பெற்று மகிழ்வர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். பெண்கள் கணவரின் அன்புக்கு உரியவராவர். பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை. சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்.செல்ல வேண்டிய கோவில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி.
குழந்தை உள்ளம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
குரு பார்வை வந்தாச்சு! குறையெல்லாம் தீர்ந்தாச்சு!
ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 8ல் இருக்கும் குரு, செப்.1ல் 9-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப்.13ல் 10-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு ஜூலை 26ல் 6-ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். ராசிக்கு 1ல் இருக்கும் கேது, ஜூலை 26ல் 12-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். ராசிக்கு 10ம் இடமான விருச்சிகத்தில் இருக்கும் சனி டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல் 14- – ஜூலை 31
குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5,7,9 பார்வையால் குறையனைத்தும் விலகி நன்மை உண்டாகும். குடும்பத்தேவை நிறைவேறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணிச்சுமை கூடும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். போட்டியாளரால் பிரச்னை தலைதுாக்கலாம். புதிய வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது. கலைஞர்களுக்கு விருது, பாராட்டு போன்றவை கைநழுவிப் போகலாம். அரசியல்வாதிகள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். மாணவர்கள் அக்கறை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவின் பார்வையால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.
ஆகஸ்ட்- 1 – 2018 ஜனவரி 31
குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவை அனைத்தும் நிறைவேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். ஆனால், கேதுவால் அவ்வப்போது பண விரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எளிதில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று தாமதமாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் வளர்ச்சிப்பாதையில் செல்வர். வழக்கு விவகார முடிவு திருப்தியளிக்கும். பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். விருந்து, விழா என சென்று மகிழ்வர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
2018 பிப்ரவரி 1 – ஏப்ரல்13
குடும்பத்தினர் ஆதரவுடன் இருப்பர். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நல்லது. சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். பணியாளர்களுக்கு பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் குருவின் பார்வை பலத்தால் வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி ஓரளவு வெற்றி பெறும். கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பது அரிது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கப் பெறுவர். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். பெண்கள் குடும்ப நலனுக்காக விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு.வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனைசெல்ல வேண்டிய கோவில் சமயபுரம் மாரியம்மன்.
பொறுமையின் இலக்கணமாக திகழும் மீன ராசி அன்பர்களே!
மாடி கட்டலாம் கோடி சேர்க்கலாம்
ஆண்டின் தொடக்கத்தில் 7ல் உள்ள குரு செப்.1ல் 8-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அங்கிருந்து 2018 பிப். 13ல் 9-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராகு 6-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜூலை 26ல் 5-ம் இடமான கடகத்திற்கு வருகிறார். கேது 12-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 11-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். ராசிக்கு 9ல் இருக்கும் சனி டிச.18ல் 10ம் இடமான தனுசுக்கு மாறுகிறார். இந்த கிரக நிலையில் பலனைக் காணலாம்.
ஏப்ரல்- 14 – ஜூலை 31
பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை சிறக்கும். மாடி மீது மாடி கட்டும் யோகம் உண்டாகும். கோடீஸ்வரனாக வாழும் பாக்கியம் அமையும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சி விமரிசையாக நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். அரசு வகையில் நன்மை ஏற்படும். ராகுவால் போட்டியாளர் சதியை முறியடிப்பீர்கள். கலைஞர்கள் புகழ், பாராட்டு பெறுவர். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமூகத்தீர்வு கிடைக்கும். பெண்களால் குடும்பம் சிறக்கும். சுற்றுலா சென்று மகிழ்வர்.
ஆகஸ்ட் 1 – 2018 ஜனவரி31
கேதுவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். முயற்சியில் இருந்த தடை விலகும். கணவன்-, மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணலாம். வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள் வகையில் நன்மை ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனை நல்வழி காட்டும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். உடல்நலம் சிறப்படையும்.
2018 -பிப்ரவரி– 1 – ஏப்ரல் 13
நினைத்தது நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடந்தேறும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பணியாளர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வர். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெறுவர். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலைப் பெறுவர். புதிய நிலம் வாங்கலாம். பெண்கள் குழந்தைகளால் பெருமையடைவர்.
பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு. ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை. செல்ல வேண்டிய கோவில் நாமக்கல் ஆஞ்சநேயர்.
– நன்றி தினமலர்-