Main Menu

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் இலங்கைப் பெண்

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் க்ளியோ வீ, (கிளியோபட்ரா) தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் லாபம் படத்தில் இசை அமைப்பாளர் இமான் இவரை பாடகியாக அறிமுகம் செய்யவுள்ளார்.

குறித்த பெண்ணின் குடும்பம், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்து விட்டதால் அங்கேயே படித்து வளர்ந்து. தற்போது ராப் பாடகியாக உள்ளார். ஏராளமான ராப் இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார்.

இவர் வெளியிட்ட விடுதலை என்கிற ஆல்பம் உலக தமிழர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையிலேயே தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாக உள்ளார்.

இதுகுறித்து இமான் தனது ருவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, “சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் ஈழ ராப் பாடகி க்ளியோ வீயை, லாபம் படத்துக்காகத் தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெருமைபடுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.