தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக் கட்டுப்பாடு – அரசாங்கம்
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த கோரிக்கையை விடுத்தார்.
மேலும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.
இருப்பினும் கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை கருத்திற்கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் குறித்து சிந்திக்குமாறும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்