Day: March 16, 2021
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுமேலும் படிக்க...
சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல் படுத்தியது மியன்மார் இராணுவம்!
சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், வடக்கு ஒக்கலாப்பா ஆகிய பகுதிகளில் அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22 வயதான இளைஞர், இந்திய இராணுவத்தில் இராணுவ வீரராக சிக்கிம் பகுதியில் பணி புரிந்துமேலும் படிக்க...
மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமனம்!
மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பைமேலும் படிக்க...
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக் கட்டுப்பாடு – அரசாங்கம்
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டாலும் போராட்டம் தொடரும் – உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள உறவுகள்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமது போராட்டம் தொடரும் என மட்டக்களப்பில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவருவோர் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சிமேலும் படிக்க...
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்று படுவோம்- பேரணிக்கு அழைப்பு
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும். அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் விடுத்துள்ளமேலும் படிக்க...