Main Menu

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…! போராளியின் மடல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கிடையில் நடந்த போர்…!
போராளியின் மடல்

“அன்பிற்குரிய “இனிய தமிழீழ பெரு மக்களே”.

“உங்களுக்கு தெரிந்த “சிறிய அறிமுகத்துடன், தகவல்”,

த‌மிழீழ உருவாக்க‌ம்!…

இல‌ங்கை அர‌சின், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் த‌மிழ் அட‌க்குமுறையால் த‌ந்தை செல்வா உட்ப‌ட்டோர் அகிம்சை வ‌ழியில் போராடி “த‌மிழீழமே” தீர்வு என்றார்க‌ள். அவ‌ர்க‌ளின் அகிம்சை வ‌ழி ப‌ய‌ன‌ளிக்க‌வில்லை.

அதன் பின் தமிழீழத்தின் தேசிய தலைவர் அவர்களால், இப்போராட்டம் ஆயுதபோராட்டமாகியது. சிங்கள இராணுவத்தின் அடக்குமுறை, கொடுமைகள், சித்திரவதைகளை கண்டு தலைவர் அவர்கள் பொறுக்கமுடியாமல் “கிளர்ந்தெழுந்தார். தமிழ் மக்களின் விடிவிற்காகவும், சுதந்திரத்திற்காகவும் இடையான தடை கற்களை உடைக்க ஆரம்பித்தார். (இது தவறா).

மகாபாரதத்தில் கூறப்பட்டவற்றை ஆழமாக சிந்தியுங்கள். யோசியுங்கள். தர்மம், நீதிக்கு எதிராக இருப்பவர்கள், எவராயினும் அழிக்கப்படவேண்டியவர்கள். (அது கூட பிறந்தவர்களாயினும்) இந்த கூற்று தவறு என்றால், கடவுள் தவறானவர். தவறான கடவுளை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள். (நீங்கள் வணங்குவதால் கடவுள் தவறானவர் இல்லை). ஆகவே, இந்த தமிழீழத்திற்கான போர் தவறில்லை.

ஒரு கண‌ம், சிந்தியுங்கள் வசதியான நல்ல குடும்பத்தில் பிறந்த தலைவருக்கு என்ன தலையெழுத்தா?

16 வயதிலிருந்து தலைமறைவாக இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க. கேட்டால் சொல்பார்கள், அவர் அங்கு சொகுசாகதான் வாழ்ந்தார் என்று. நான் ஒன்று கூறுகிறேன், உலகில் உள்ள மற்ற தலைவர்கள் போல் அவர் சொகுசாக வாழவில்லை. அவர் நல்லா இருந்தால்தான் நாங்கள் நல்லா இருக்க முடியும்.

அண்மை காலத்தில் இலங்கை இராணுவம் வெளியிட்ட வன்னியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் பாருங்கள், நீங்கள் சிந்தியுங்கள், கஷ்டப்பட்ட குடும்பதில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு பெரிய ஹொட்டலில் போய் சாப்பிட்டு, அல்லது சுற்றுலா தளங்களுக்கு ஒரு முறை சென்றிருந்தாலும், புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எடுத்து அதை பாதுகாப்பார்கள். இதற்காக இவர்கள் தினமுமா?, அல்லது சிலவேளைகளிலோ இப்படி சொகுசாக வாழ்பவர்கள் என்று கருதமுடியுமா?

உங்கள் சிறு வயது பிள்ளைகளுக்கு மிக வேண்டப்பட்டவர்கள், விலை உயர்ந்த சிறு விளையாட்டு பொருள் ஒன்றை அன்பளிப்பு அளித்தால், உங்களால் தடுக்க முடியுமா? இக் குழந்தை சிறு வயதில் எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் வாழும் இந்த குழந்தைக்கு இது ஒன்று கிடைத்தால் சொகுசா?.

பிறந்தநாளே கொண்டாடாத குழந்தை ஏதேனும் ஒரு முறை அமைதியான சந்தர்ப்பத்தில் சிலரின் விருப்பங்களுக்கு அமைய ஒரு முறை கொண்டாடினால் அது சொகுசா? இப்படியான குழந்தையின் வாழ்க்கையை சொகுசு வாழ்க்கை என்பவர்களை எப்படி கூறுவது?

சிந்தியுங்கள்!…

ஆரம்பகாலத்தில் தலைவர் அவர்கள், அப்போதைய யாழ்.மேயராக இருந்த அல்பிரைட்டை கொன்றாராம். இது மாபெரும் குற்றமாம், ஒரு இனத்தில் பிறந்து அதே இனத்தை காட்டிக் கொடுத்தும், உயிர் பலி எடுப்பதை அங்கீகரித்து, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன். ஒரு தகுதியான பொறுப்பில் இருக்க முடியுமா? இவ்வாறானவர்கள் வாழ தகுதியானவர்களா? இதை அல்பிரைட்டுக்கு வேண்டியவர்கள், தலைவரை தப்பாக பிரச்சாரம் செய்தார்கள். (சுயநலத்திற்காக)

இதே, போல் ஒவ்வொரு தொடர் சம்பவங்களும். சிலர் தாமும் தமிழருக்காக போராடுகிறோம் என்பார்கள். போராடுபவர்கள் நல்ல விதமாக போராடினால் யாராக இருந்தாலும் வரவேற்போம். அதை விட்டு விட்டு இப் போராட்டத்தை அரசியலாக்குவது, வியாபாரம், பதவி, பணம், பெண் என்று கட்டு கோட்பு இல்லாமல் இருந்தால் என்ன செய்வது, அவர்களிடம் பேசிப்பார்த்தார்கள் முடியவில்லை, போராட்டத்திற்கும் தடை கற்களாக இருந்தார்கள். என்ன செய்வது, நீங்களே கூறுங்கள். இப்படியானவர்களுக்கு துதிபாடுகிறவர்களும், இவர்களின் நட்பை வைத்திருந்த சில அரசியல்வாதிகளும், மற்றும் சில முக்கிய பிரமுகர்களும் இவர்கள் மரணத்தை தப்பு என்கிறார்கள்.

உண்மையில் நீங்கள் இதை விட்டு விட்டு இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு வேதனைகள், இழப்புகள் என்பதை அந்த பாதிக்கப்பட்டவர்கள் இடத்தில் இருந்து பாருங்கள். எல்லோராலும் எதிர்த்து போராட முடியாது. ஆனால் போராட முடிந்தவர்கள் போராடாமல் இருப்பதே மாபெரும் தவறு.

இப்படி நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும், மிகமோசமாக பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் இருந்து பாருங்கள். உண்மையான வலி புரியும். இவர்கள் என் உறவினர்கள் இல்லை என்று நினைப்பதை விட்டு விட்டு, (இப்போது உறவினர்களாக இருந்தாலே சில சமயங்களில் சில பேருக்கு வலிப்பதில்லை) தனக்கு தான் கஷ்டம் வந்தால்தான் புரியுதே தவிர, அப்படியே தனக்கு வந்தாலும் சிலர் திரும்பவும் வரக்கூடாது என்பதற்காக ஒதுங்குகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.

உங்களையே மீண்டும் இது தாக்கும் மற்றும், உங்கள் குழந்தைகள் என அடுத்த சந்ததியினரையும் தாக்கும். இப்படி எவ்வளவு காலத்திற்கு அடிமையாக இருப்பீர்கள். அடிமையாக இருப்பதை விட, உயிரை விடுவது மேல். உயிரை விட துணிந்தால் ஏன் வீணாக உயிரை விட வேண்டும். உயிரை விட துணிந்த நீங்கள் அதை பிரயோசனமாக அதுவும் நமது நாட்டிற்காகவும், எம் மக்களுக்காகவும் விட்டால் எவ்வளவு பெரும் நன்மை. அடுத்த சந்ததியினராவது நிம்மதியாக வாழ்பார்கள். அல்லது அவர்களும் உங்களை போல ஒவ்வொரு நாளும் பயத்திலும், நிம்மதியில்லாமலும் வாழவேண்டிவரும்.

மற்றும், நீலன்திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்ற அறிவு தலைவர்களை எல்லாம் புலிகள் கொன்றுவிட்டார்கள் என்கிறார்களே. அந்த அறிவாளிகள் தங்கள் அறிவை என்ன செய்தார்கள். எதிரிக்கு அடகு வைத்தார்கள். தன் இனத்திற்காக செய்திருந்தால் எவ்வளவோ நன்மை அதை விட்டு விட்டு இனத்திற்கு ஆபத்தான பாதையை தேர்ந்தெடுத்தார்கள். தமிழ் மக்களின் பாதுகாவலர்களான புலிகளையும் அழிக்க திட்டமிட்டார்கள், பிரச்சாரம் செய்தார்கள். தங்களின் சுயநல சுகபோக வாழ்க்கைக்காக. இப்படி எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள்.

சிந்தியுங்கள், சிங்கள தலைவர்கள் அவர்கள் இனத்திற்காக ஒற்றுமையுடன் குரல் கொடுப்பது போல இவர்களும் கொடுத்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இதற்கு எதிர் மாறாகவே இவர்கள் இருந்தார்கள் தவிர, என்ன செய்தார்கள். லக்ஸ்மன் கதிர்காமர் சந்திரிக்காவிற்கு மிகவும் வேண்டியவராக இருந்ததும் வெளிநாட்டமைச்சராகவும் இருந்தார். நீலன் திருச்செல்வம் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் செல்வாக்கோடு இருந்தார். இவ்வளவு காலமாக என்ன செய்தார்கள். கேட்டால் புலி தடையாக இருந்தது என்பார்கள்.

புலி நல்லதுக்கு தடையாக இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அவர்களால் புலிகளை மீறி தமிழ் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மனம் இருந்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை, சிங்கள இனவாதமும் விட்டுயிருக்காது அப்படியானால் ஏன் இவர்களுடன் கைகோர்ப்பான்.

மற்றும், ராஜீவ் காந்தி கொலை மாபெரும் தவறு என்கிறார்கள். ராஜீவ் அமைதி ஒப்பந்த காலத்தில் அவரின் அமைதி படை இலங்கையில் என்ன செய்தது.

பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை எடுத்த‌து, கொடும் சித்திரவதை, பாலியல் வல்லுறவு, சொத்துக்கள் சூறையாடல் அழிப்பு என எவ்வளவோ நாசம் பண்ணினது, ஒரு ராஜீவ் இறந்ததிற்கு இவ்வளவு துடிக்கிறார்ககளே.

அங்கு அவ்வளவுபேர் இறந்ததிற்கும், அக்கொடுமைகளுக்கும் என்ன பதில் சொல்வார்கள்.

இப்ப அதனால் எவ்வளவு பிரச்சினை என்கிறார்கள். அவர் இருந்திருந்தால், அப்பவே அழித்திருப்பார்கள், அப்ப அழித்திருந்தால் இப்படியான சம்பவம் உலகிற்கு தெரிந்திருக்காது. தமிழ் இனத்தின் அழிப்பும் அவ்வளவாக தெரிந்திருக்காது. ஆனால் இப்ப தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கிறது. முழு உலகத்தின் கவனத்திற்கும் வந்திருக்கிறது. மற்றும் முழு தமிழ் இனமும் கிளர்ந்து நிற்கிறது. இது எவ்வளவு பெரிய வெற்றி. ஆனால் எம் இனத்திற்கு இந்தியா மாபெரும் தவறு இழைத்து விட்டது. தனக்கு தானே மண் அள்ளிக் கொட்டி விட்டது. மற்றும் இந்தியாவின் இச்செயலை தமிழீழ மக்கள் மறக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மேலிடத்தில் இருக்கும் சில முக்கிய பகை உணர்வு தலைவர்கள் தான் இதற்கெல்லாம் காரணம். அதனால் ஒட்டு மொத்த இந்தியாவை இவ்வளவு அழிவிற்கும் பின் நாங்கள் எதிரியாக நினைக்கவில்லை. உண்மை நட்பு நாடாக இருக்கவே விரும்புகிறோம். அதுவே இந்தியாவினது பாதுகாப்பிற்கும் உகந்தது.

இப்ப இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் தூர நோக்கு பார்வை குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவும் இத்தவறை ஒரு நாள் உணர்வார்கள். அப்போது இவ் அழிவுக்கு என்ன பதில் சொல்வார்களோ.

புலிகள் இராணுவ பலத்தை மட்டுமே நம்பினார்கள், அரசியல் போக்கை மறந்து விட்டார்கள், வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்றார்கள். உண்மையில் புலிகள் அரசியல் சம்பந்த நடவடிக்கைகள் எடுத்தார்கள். வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்ப்படுத்தினார்கள் ஆனால், வெளிநாடுகள் விலை பேசுவதாக அமைந்தது, சில விடயங்கள் இந்தியாவுக்கு பாதகமான விடயமாகவும் இருந்தது.

எங்கள் தலைவர் எதற்கும் விலை போகமாட்டார். நம்பினவர்களை ஏமாற்றவும் விரும்பமாட்டார். அப்படி பல காரணங்களால் சரிவரவில்லை. ஆனாலும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்தார்கள். உலக நாடுகள் தங்கள் சுயநலத்தை கருத்திற் கொண்டே அரசியல் நடத்தினார்கள். தமிழ் இனத்தின் உணர்வு, சுதந்திரம், கெளரவம் கண்ணுக்குத் தெரியவில்லை. என்பதே உண்மை.

ஒரு கண‌ம் சிந்தியுங்கள், பல ஆயிரம் மாவீரர்களின் தமிழீழ கனவை அழிக்கலாமா? தலைவர் இதை எப்படி செய்வார்? மாவீரர்களை நீங்கள் சாதாரணமாக பார்க்காதீர்கள். ஒவ்வொரு மாவீரனும் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். இளவயதில் நாட்டுக்காக எந்த சுகபோக வாழ்க்கையும் அனுபவிக்காமல், நாட்டுக்காகவே சந்தோஷ்மாக வீரமரணமடைந்தார்களே, நீங்கள் சிந்தியுங்கள் உங்கள் எல்லோராலும் அப்படி ஆகமுடியுமா?

அந்த தலைவன் வளர்த்த இந்த மாவீரர்களாளேதான் முழு உலகிற்கும் தமிழ் இன பெருமை தெரியவந்தது. இல்லையென்றால் ஆரம்பகாலம் போல் அடிமையாக, உணர்வற்று பயந்து வாழ்ந்தவர்களாகவே இருப்பீர்கள்.

அவர்களின் தியாகத்தினால் நீங்கள் இன்று கெளரவத்துடன் ஓரளவேனும் வாழ்கிறீர்கள். மாவீரர்களை உங்களில் ஒருவரைப் போல் நினையுங்கள், அதன் புனித தன்மை தெரியும். அது புரிந்தால் “நீங்களும் உணர்வுள்ள, வீரமும், மானமும் கொண்ட சோர்ந்து போகாத வீர தமிழ் மகன் ஆவீர்கள்”.

எமது போராட்டத்தில் தலைவர் அவர்கள் சில தவறுகள் செய்திருப்பதாக கூறுகிறார்கள். எங்களுக்கு பாதகமாக அமைந்தவற்றை கூறினார்கள்.

ஆனால் அந்த முடிவுகள் அந்நேரத்தில் நிச்சயமாக சரியானதாகவே எடுக்கப்பட்டது. போராட்டத்தில் வெற்றி, தோல்வி வருவது சகஜம், அதற்காக தவறு என்று அர்த்தமில்லை.

தலைவர் அவர்கள் ஒரு முடிவை தீர்க்க தரிசனமாகவே எடுப்பார். எடுத்த பின் அதைப் பற்றி மனச்சஞ்சலங்கள் கொள்வதில்லை. ஒரு முடிவு எடுத்தால் எப்பவும் தெளிவுடனே இருப்பார். மற்றவர்கள் போல் அடிக்கடி குழப்பிக் கொண்டிருப்பதில்லை. இதில் இருந்து அவரின் மன உறிதியை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் போல் இருந்திருந்தால் தனி மனிதராக இவ்வளவு கால போராட்டத்தை வழி நடத்தியிருக்க முடியாது. இது உண்மை.

எமது போராட்டத்தில் தற்சமயம் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அதை தோல்வி என்று மட்டும் பார்க்காமல், வேறு வழிகளிலும் சிந்தியுங்கள். கடைசியாக நடந்த வன்னிப்போரில் இலங்கை இராணுவத்திற்கும், புலிகளுக்கும் நடந்த போரா? நிச்சயம் இல்லை.

இது புலிகளுக்கும், உலக நாடுகளுக்கிடையில் நடந்த போர். எந்த உதவியின்றி தனியே நின்ற புலிகளும், 20 உலக நாடுகளின் துணையுடன் நின்ற இலங்கை அரசும்.

அதாவது உலக நாடுகளின் முப்படைகளுக்குரிய ஆயுதம், புலனாய்வுத் தகவல்கள், ராடர்கள், பயிற்சி, இராணுவம், இராணுவ வல்லுனர்கள், மருத்துவங்கள், இராணுவ உபகரணங்கள், பணபலம், பதவிபலம் என்று நிறைய ஒன்று சேர்ந்து வன்னிப்போர் முனையில் குவித்தார்கள்.

இது மட்டுமில்லாமல் விலை போனவர்களும், துரோகிகளாகியவர்களும் இப்போரில் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு இருந்தும் உலக நாடுகளால் புலிகளுடன் எவ்வளவு காலம் போரிட்டார்கள் என்று யோசியுங்கள்.

அவ்வளவு காலம் போரிட்டதும் இல்லாமல், கடைசியிலும் முடியாமல் கோழைத்தனமாகவும், நயவஞ்சகத்துடனும் தடை செய்யப்பட்ட நச்சுக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், மயக்கக்குண்டுகள் என்பவற்றையும் வீசினார்கள். அவற்றை வீசியும் புலிகளும், மக்களும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தார்கள் என்று யோசியுங்கள்.

புலிகள் இன்னும் போராடி இருப்பார்கள். ஆனால் சிலர் கூறினார்கள் புலிகள் ஏன் பெரிதாக சண்டை பிடிக்கவில்லை எல்லாவற்றையும் இழந்தார்கள் என்று. வெளியில் இருந்து பார்பவர்களுக்கு புரியாது.

ஏனெனில் இலங்கை அரசு போர்பகுதியில் செய்தியாளர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிக்கவில்லை,

உண்மையில் புலிகள் அங்கு முழு பலத்துடன் போரிட்டார்கள். சிந்தித்து பாருங்கள் ஒரு நாள் போருக்கு எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டு இருக்கும் இம் மாபெரும் போரில். ஆனால் புலிகள் பல மாதக்கணக்கில் நடந்த போரை தாக்குப்பிடிக்க எவ்வளவு ஆயுதங்கள் தேவைப்பட்டிருக்கும் என்று அவர்களின் ஆயுதக் கப்பல்கள் வரமுடியாமல் போனதால் ஆயுத சப்ளை குறைந்து விட்டது.

உண்மையில் புலிகள் பலத்தை உலக வல்லரசு மற்ற இதர நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் நன்கு கணித்திருப்பார்கள். என்பதே உண்மை. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளித்த “கிருஸ் ரையன்” போன்றவர்களும் புலிகளின் பலத்தை ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளைப் போல் சிறிய நிலப்பரப்பில் குறைந்த வளங்களுடன் உலக நாடுகளுடன் இவ்வளவு காலம் போரிட்டு அப் படைகளுக்கு பாரிய இழப்புகள் (இலங்கை அரசு அறிவித்தது கடைசி போரில் 6500 இராணுவம் பலி, 25000 ற்கு மேற்பட்டோர் காயம் என்றார்கள். ஆனால் உண்மையில் எவ்வளவு இருக்கும் யோசியுங்கள்). ஏற்படுத்த உலகத்தில் எந்த இராணுவத்தாலும் நிச்சயமாக முடியாது. தடை செய்யப்பட்ட குண்டுகளின் மத்தியில் போய் நின்று பார்த்தால் தான் புரியும். அப்போரின் கணம்.

தற்போது தமிழ் மக்கள் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பியிருக்கிறார்கள்.

இதில் அதாவது தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களும், ஆயிரக்கணக்கான போராளிகளும் மரணித்தவேளையில் அவர்கள் மரணிக்கும் போது தான் மட்டும் தப்பிப்பது சரியில்லை என நினைத்தும்,

தான் இருப்பதால் தான் உலக நாடுகள் ஒரு தீர்வு தராமல் இருப்பதாகவும் கருதி போரிட்டு வீரமரணம் அடைந்திருந்தாலும்,

அல்லது தான் வீரமரணம் அடைந்தால் இவ்வளவு கால போராட்டம் வீணாகிவிடும் என்றும், உலக நாடுகளிற்கு தெரியாமல் இருந்தாலும்,

கடைசி நேரத்தில் தலைமறைவாக இருந்தாலும். இதில் எந்த முடிவையும் தலைவர் அவர்கள் எடுத்திருந்தாலும், நிச்சயமாக போற்றுதலுக்குரியவராவார்.(எப்பவும்)

அந்த மாமனிதனின் விலை பேசமுடியாத உறுதிபடைத்த இலட்சியத்தையுடைய அவரின் மனதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. அவர் எப்பவும் எந்த துயரத்திலும் மனம் தளராத உறுதிபடைத்தவர். எப்போதும் தெளிவாகவே இருப்பவர், அதனால் அவர் அந்த நேரத்தில் நிச்சயமாக உறுதியான ஒரு முடிவை எடுத்திருப்பார். ஆகவே நீங்கள் எல்லோரும் தலைவனின் இலட்சியத்தை அடைவதற்காக, ஒன்று பட்டு கருத்து வேறுபாடுகளை இப்போதாவது மறந்து ஒற்றுமையுடன் தமிழ் இனம் சுயகெளரவத்துடன், தலை நிமிர்ந்து, உரிமையுடன் நிம்மதியாக வாழ உலக நாடுகளின் மனதில் இடம்பிடிக்க கூடியவாறும், அதனால் “தமிழ் தனி அரசு” அமைய பாடுபட உறுதிமொழி எடுத்துகொள்வோமாக.

இவ் அமைதி வழிப்போராட்டம் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறைகளற்றதாக இருக்க மிகமுக்கிய கண்காணிப்புடன் செயற்படுங்கள். தீயசக்திகளும் தூண்டிவிடக்கூடும், எச்சரிக்கையாக இருங்கள்.

இப் போராட்டத்தில் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பதவிப்போட்டிகளை இச்சந்தர்ப்பத்திலாவது தமிழர்களாகிய நீங்கள் நீக்கிவிடுங்கள்.

தமிழ் இனம் தலைநிமிராமல் இப்பதவி, பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். நீங்கள் மட்டும் எத்தனை நாட்கள் வாழுவீர்கள். வாழவிடுவார்கள்,

சிந்தியுங்கள். தயவுசெய்து அளவுக்கதிகமான ஆசைகள், பொறாமைகள், போட்டிகளை தள்ளிவையுங்கள். நீங்கள் அவர் பக்கம், இவர் பக்கம் என்றில்லாமல் நியாயத்துடன், வழிதவறாதவர்களுடன் உங்களின் உண்மையான மனச்சாட்சிபடி நில்லுங்கள். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள்.

எதிரி எங்களை அழிக்க எவ்வளவு இரகசியமாக, திட்டங்களை உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் தீட்டினான். அவனை விட புத்திசாலிகள் நீங்கள். ஏன் உங்களால் முடியவில்லை. முக்கியமாக அவலத்தில் உள்ள மக்களின் நிலையை ஒரு கண‌ம் சிந்தியுங்கள். ஏனோ தானோ என்று இல்லாமல், அவலங்களை உங்கள் அவலங்களாக எண்ணிப் பாருங்கள். இவர்களை வெளியே எடுப்பது புலம்பெயர் தமிழ் மக்களாகிய உங்கள் கையில் உள்ளது.

புலிகளால்தான், இவ்வளவு இழப்பு என்பவர்கள், இப்ப அவர்களுக்கு எந்த தடையும் தற்சமயம் இல்லை. இப்ப இவர்களது பேச்சு இலங்கை அரசிடம் எவ்வளவுக்கு எடுபடுகிறது என்பதை பார்ப்போம். தமிழ் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு எப்படி தங்களால் உடனடியாக செய்யமுடியும் என்பார்கள். சரி இப்போராட்டத்திற்கு முன் இவர்கள் என்ன செய்து எதை பெற்றுக்கொடுத்தார்கள். ஆகவே எல்லாவ‌ற்றையும் உணர்ந்து செயற்படவேண்டிய காலம் இது.

எங்கள் போராட்டம் வெறும் ஆயுதபோராட்டத்தில் மட்டும் இருக்கவில்லை. புலிகள் ஆரம்பகாலங்களில் அகிம்சை வழியிலும், பேச்சுவார்த்தை வழிகளிலும் ஈடுபட்டார்கள். அவை திருப்திதரவில்லை, ஏமாற்றமாகவே இருந்தது.

உதாரணமாக திலீபன் அண்ணாவின் அகிம்சை போராட்டம். அவரின் தியாகம் காந்தியின் தேசத்திற்கே அகிம்சையை உணர்த்தியது. அப்படி நடந்தும் ஏதும் கிடைக்கவில்லை. அதன்பின் ஆயுத போராட்டம் உச்சம் பெற்றது. எம் போராட்டத்தை எதிரி தவறு என்றாலும், எம் இனத்தவர்களும் அல்லவா. இலங்கையில் எத்தனையோ சிங்களவர்களுக்கு இடையில் போட்டி கட்சி, குழுக்கள் உள்ளது. ஆனால் தமிழனுக்கு எதிராக என்றால் ஒன்று சேருகிறார்கள். இங்கு அப்படியா, எம் இனத்தவர்கள் சிலர், எதிரி பக்கம் செல்கிறார்கள். எவ்வளவு வேதனை. உயிருக்காக எப்பவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

ஆகவே, நாம் எல்லோரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் உலக அரங்கில் எம் உணர்வுகளை உரத்து ஒலிக்க செய்வதுடன், எம் சுயஉரிமையை பெற்றுக்கொள்வதுடன் “தமிழ் அரசை” நிறுவ உறுதி பூண்டு நிற்போமாக.

என் அன்பான மக்களுக்கு இன்னொரு வேண்டுகோள், தமிழர்கள் எல்லோரும் (முக்கியமாக குழந்தைகளுக்கு) மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை குழந்தைப் பருவத்திலே நிச்சயமாக கற்று அறிந்து கொள்ளவையுங்கள். அவை ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கைக்கும் மிக முக்கியமானவை. அவற்றை மேலோட்டமாக பார்க்காமல் அதில் இருப்பவற்றை ஆழ்ந்து சிந்தியுங்கள். அத்துடன் எமது தாயக வரலாற்றை முக்கியமாக அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருங்கள். தெரியாத பலவிடயங்களை தெரிவியுங்கள்.

எனவே சோர்ந்து போகாமல் எமது அமைதி வழி “தமிழ் தனி அரசு” போராட்டத்தை பெரும் எழுச்சியுடன் தொடர்ந்து கொண்டிருப்போமாக. இப் போராட்டத்தின் முடிவை காலம் நிர்ணயிக்கும். அதுவரை உலக நாடுகளின் கைகளில் தான் தற்போது உள்ளது. அதனால் இவர்கள் உண்மையை உணர்ந்து நல்ல தீர்ப்பை தருவார்கள் என்று நம்புவோமாக. அப்படி நடக்காவிடின் அதன் விளைவுகளுக்கு உலக நாடுகளே பொறுப்பாவார்கள்.

“ஒற்றுமையின் பலம் ஓங்குக”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இளங்கோ…

பகிரவும்...