தமிழர்களின் காணிகளில் சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து தொழில் செய்து வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் இங்கு வாழ்ந்து வருவதாகவும் கடந்த 30 வருட யுத்தத்தின் போதும் தாங்கள் இந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்த மக்கள் 1982 ஆம் ஆண்டு தமக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 62 வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்பட்டதாகவும் அந்த வீடுகளின் அத்திவாரங்கள் தற்போதும் இருப்பதாகவும் அந்த இடத்தில் தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கு பல்வேறு முயற்சிகளின் மத்தியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தம்மில் ஒரு தொகுதியினருக்கான வீட்டுத் திட்டத்தை இன்று ஆரம்பிக்க இருந்ததாகவும் முல்லைத்தீவு மாவடட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் இணைந்து தடுத்து நிறுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தி குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தமக்கு 30 வருடங்களுக்கு மேலாக வீட்டுத்திட்டம் இல்லாமல் தாம் தகரக் கொட்டகைகளில் பல்வேறு துன்பங்களோடு வாழ்ந்து வருவதாகவும் தமக்கான விடுதலை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி பிரதமர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிடடவர்கள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்ததோடு எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் தங்களுக்கான உறுதியான தீர்வு வழங்கப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
குறித்த விடயம்தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் வினவிய போது குறித்த முகத்துவாரம் பகுதியானது பிரிட்டிஷ் காலத்து உறுதியோடு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணியாக இருக்கின்றது அதனுடைய உறுதிகள் தமிழ் மக்களது கைகளில் இன்றும் இருக்கிறது தமிழ் மக்கள் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக அங்கிருந்து இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கு குடியேறிய குடும்பங்கள் இன்று வீட்டுத்திடடும் கோருகின்றனர்
குறித்த காணிகள் அனைத்தும் வயல் காணிகள் இந்த காணிகளில் சடடப்படி வீடுகள் அமைக்க முடியாது இருந்தும் தகர கொட்டில்களை அமைத்து சட்டவிரோதமாக ஆரம்பத்தில் குடியேறியவர்கள் இப்போது வீடு கோருகின்றனர்
அத்துமீறி தமிழ் மக்களது காணிகளில் குடியேறி இருக்கின்ற மக்களுக்கு வீடுகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது இவர்கள் குடியேறும் போது தமிழ் மக்களால் தடுக்கக்கூடிய நிலை இல்லை காரணம் நாட்டில் நிலவிய யுத்தம் . தற்போது யுத்தம் நிறைவடைந்த நிலையில் தமிழ் மக்கள் தமது காணியை கோருகின்றனர் இந்நிலையில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களுக்கு வீடு வழங்கதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை முற்படுகின்றனர் ஆனால் அந்த காணிகளுக்கு ஏற்கனவே தமிழ் மக்களுக்கு பிரிட்டிஷ் காலத்து உறுதிகள் காணப்படுகின்றன இவற்றை எவ்வாறு அவர்களுக்கு வழங்குவது அதனாலேயே இதனை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டேன் இவ்வாறே எமது பூர்விக பூமியான மணலாற்றையும் இன்று அவர்கள் ஆக்கிரமித்திருக்கின்றனர் என வன்னி மாவடட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்-