தமிழக முதல்வரின் வாகனம் மீது செருப்பு வீச்சு
தஞ்சாவூரில் நேற்றையதினம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற் தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்தார்.
இந்தநிலையில் இரவு 9 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வானில் அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில், திடீரென அவரைக்கு குறிவைத்து செருப்பு ஒன்று வாகனம் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் செருப்பு முதல்வர் மீது படாமல், அவருக்குப் பின்புறத்தில் விழுந்துள்ளது எனவும் பின்புறத்திலிருந்தே அந்த செருப்பு வீசப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரால் வீசப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.