தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தால் – தண்டனை இல்லை
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருந்தால், தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் போலி சுகாதார அனுமதி அட்டை (pass sanitaire) வைத்துக்கொள்கின்றனர். இது பல ஆயிரம் யூரோக்கள் தண்டப்பணம் மற்றும் ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Veran தெரிவிக்கையில், போலி சுகாதார அனுமதி அட்டை வைத்திருந்து, தண்டனைக்கு உள்ளாக உள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள சம்மதித்தால், அவர்களுக்கான தண்டனை இரத்துச் செய்யப்படும் என தெரிவித்தார்.
“தடுப்பூசி முக முக்கியமான பங்காற்றுகிறது. இல்லையென்றால் இப்போது இரண்டாவது உள்ளிருப்பை நாம் எதிர்கொண்டிருப்போம்!” எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.