தங்க முலாம் பூசப்பட்ட காரை பறிமுதல் செய்த ஜெர்மனிய காவல்துறை
ஜெர்மனியில் கண் கூசும் வகையில் தங்க முலாம் பூசப்பட்ட Porsche காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜெர்மனியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர், தங்கம் முலாம் பூசப்பட்ட porsche காரை பயன்படுத்தி வந்தார். ஏற்கனவே ஒருமுறை அந்தக் காரை தடுத்து நிறுத்திய ஜெர்மன் காவல்துறையினர், அது கண் கூசும் வகையில் இருக்கிறது. எனவே மேலே பூசபட்டுள்ள தங்க முலாமை நீக்கிவிட்டு மீண்டும் அதைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
காவல்துறையினரின் இந்த உத்தரவை தங்கம் முலாம் பூசப்பட்ட போர்ஷே கார் உரிமையாளர் மதிக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்தக் காரை, இரண்டாம் முறையாக நிறுத்திய காவல்துறையினர் அவரது கார், அதன் சாவி, ஆவணங்கள் மற்றும் கார் எண் என அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அந்தக் காரின் உரிமையாளருக்கு அபராதத்தையும் விதித்துள்ளனர். ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற தகவல்களை வெளியிடவில்லை.