தகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அதிகாரம்
தகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாரிய அதிகாரம் கிடைத்திருப்பதாக ஊடக துறை அபிவிருத்தி மற்றும் திட்ட பணிப்பாளரும் தகவல்களை அறிந்துக்கொள்ளும் திட்ட அலுவலகத்தின் பணிப்பாளர் சுகத் கிட் சிறி தெரிவித்துள்ளார்.
இன்று காலை அம்பாறை பதியத்தலாவ பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற அரச அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
இந்த மாவட்டத்தில் அரச அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டம் நாளை 9ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலக தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பொதுமக்கள் தகவல்களை கோரும் பட்சத்தில் தடையின்றி அவற்றை மக்களுக்கு வழங்குவதற்கு உள்ள சந்தர்ப்பம் குறித்தும் இதன் போது விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேவேளை
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துக் கொண்ட முஸ்லிம் மகளிருக்கு விளக்கமளிக்கப்படுவதை இதில் காணலாம் . இந்த நிகழ்வு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேச மௌலவிகள் கலந்துக் கொண்டனர்.
இதேவேளை
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலாளர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெறற் சுகாதார சிகிச்சையில் பிரதேச மக்கள் கலந்துக் கொண்டனர்.
இதேவேளை
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக அம்பாறை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச ஆரம்ப பாடசாலை மற்றும் பெற்றோர் தெளிவுப்படுத்தப்படனர்