ஜேர்மனியில் மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்
ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது.
பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதிபர் அங்கலா மேர்க்கெல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 5 வரை கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஐந்து நாட்கள், ஜேர்மனியர்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.