ஜுலை 14 : 25.000 பார்வையாளர்களுடன் சோம்ப்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வுகள்
இவ்வருடத்துக்கான தேசிய நாள் நிகழ்வுகள் சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகள் பார்வையாளர்கள் இன்றி மிக மிக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்றிருந்தது. aஅனால் இம்முறை கிட்டத்தட்ட இயல்பான நடைமுறையுடன் இந்த ஏற்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசேயில் இராணுவ அணிவகுப்பு இடம்பெறும் எனவும், அதன்பின்னர் Place de la Concorde பகுதியில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும் என அதன் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அணிவகுப்பில் 5.000 வீரர்கள், 4.300 இராணுவத்தினர், 71 விமானங்கள், 25 உலங்குவானூர்திகள், 221 கவச வாகனங்கள், 200 குதிரைகள் சாகச நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை 25.000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த தேசிய நாள் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த விபரங்களும் பின்னரே அறிவிக்கப்படும்.