Day: June 6, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 294 (06/06/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ராணி எலிசபெத்- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கிடையில் அடுத்த வாரம் சந்திப்பு
அடுத்த வாரம் பிரித்தானியாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் முடிவில் ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடனை தனது விண்ட்சர் கோட்டை வீட்டில் சந்திப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதன்படி, ராணி எலிசபெத்,மேலும் படிக்க...
ஜனநாயகம் மீதான சீனாவின் ஒடுக்கு முறையிலிருந்து தப்பி பிரித்தானியாவில் தஞ்சமடைந்த ஹொங்கொங் குடும்பம்!
தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரித்தானியா வழங்கிய விசேட விசா திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான ஹொங்கொங் மக்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு லிவர்பூலில் சுதந்திர வாழ்வதற்காக ஒரு குடும்பம் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக ஸ்கை நியூஸ் செய்திமேலும் படிக்க...
போதைப்பொருள் உட்கொண்ட சிறுவன் உயிரிழப்பு – பெற்றோர் கைது
போதைப்பொருள் உட்கொண்ட சிறுவன் ஒருவர் சாவடைந்துள்ளான். அவனது பெற்றோர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Villeurbanne (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 11 வயது சிறுவன் ஒருவர் அதிகளவில் போதைப்பொருளை உட்கொண்டுள்ளான். மிக ஆபத்தான நிலையில் காலைமேலும் படிக்க...
ஜுலை 14 : 25.000 பார்வையாளர்களுடன் சோம்ப்ஸ்-எலிசேயில் தேசிய நாள் நிகழ்வுகள்
இவ்வருடத்துக்கான தேசிய நாள் நிகழ்வுகள் சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகள் பார்வையாளர்கள் இன்றி மிக மிக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம்பெற்றிருந்தது. aஅனால் இம்முறை கிட்டத்தட்ட இயல்பான நடைமுறையுடன் இந்த ஏற்பாடுகள் இடம்பெறும் எனமேலும் படிக்க...
சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிக்கிறது – சீனா குற்றச்சாட்டு
சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மூலமாக சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிலும்மேலும் படிக்க...
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது
நாடு முழுவதிலும் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,46,759 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும்மேலும் படிக்க...
அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்: ஐ.நா.சபை தகவல்
அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பேற்றார். 10 ஆண்டுக்கு முன்புமேலும் படிக்க...
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு கொரோனா – உயிரிழப்பு அபாயம் இல்லை என ஆய்வில் தகவல்!
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு நேராது என எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் வைத்தியசாலை, “2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் கொரோனா வந்த 36 நோயாளிகளும்மேலும் படிக்க...
ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன
ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கை ஆரம்பத்தில் 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளைமேலும் படிக்க...
கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகமேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள்: அமெரிக்காவிடம் இலங்கை அரசு முக்கிய கோரிக்கை
இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டாமென அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவின் ஊடாக குறித்த கோரிக்கையை இலங்கை அரசு முன்வைத்துள்ளது. அமெரிக்கமேலும் படிக்க...
20ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி. பெர்னபெத்தம்மா தேவசகாயம் (06/06/2021)
தாயகத்தில் நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.தேவசகாயம் பெர்னபெத்தம்மா அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் 06ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று நினைவு கூரப்படுகின்றது . அமரர் பெர்னபெத்தம்மா தேவசகாயம் அவர்களை அன்பு பிள்ளைகள் அன்ரனி, யேசுதாசன்,மேலும் படிக்க...