சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் – மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு குறையாமல் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் நோய் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள கவலை வெளியிட்டுள்ளனர்.
ஏனைய மாவட்டங்களில் உள்ள தளர்வுகள் போல் சென்னைக்கு தளர்வு அளிக்கப்படகூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரொனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 258,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,207 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...