சூரத் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில் சிக்கி அங்குள்ள பயிற்சி வகுப்பில் இருந்த 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.