Main Menu

சீனாவில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் பெரிய சுவர் உடைந்து கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சியில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றி கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.

தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.