சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்ப்பு: அவுஸ்ரேலிய தன்னார்வ அமைப்பு தகவல்!
சீனாவில் சுமார் 16 ஆயிரம் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இயங்கும் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் (ASPI) புள்ளியியல் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின், வடமேற்கு மாகாணங்களில், உய்குர் மற்றும் டர்கிக் மொழிகள் பேசும், 10 இலட்சம் முஸ்லிம் மக்கள், சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதம் தொடர்பான தங்கள் சம்பிரதாயங்களை கைவிட மறுத்ததற்காக, இவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற சீனாவின் வடமேற்கில் உள்ள நிங்ஜியா மண்டலத்தில், டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர்.
சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இதனிடையே உய்குர் இன மக்களை, சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அதிகமாக முகாம் மற்றும் சிறைகளை சீனா இரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழிப்புணர்வு இயக்கம் கூறியுள்ளது.