கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் மோடி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...