Day: March 1, 2021
உறவுகளை சந்திக்கும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது – திருமலை உறவுகள்
காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற விஷேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமை தொடர்பாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸாரே, இன்று (திங்கட்கிழமை) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். வல்வெட்டித்துறையில் உள்ளமேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- வி.உருத்திரகுமாரன்
ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு. சின்னையா ரமேஸ்வரன் (01/03/2021)
யாழ். கோண்டாவில் கிழக்கு MS லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராச இரத்தினம் சின்னம்மாமேலும் படிக்க...
ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத் தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன் வைக்கும் – இரா.துரைரெத்தினம்
இலங்கை இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன்வைக்குமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபைமேலும் படிக்க...
ஹைடியில் ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கை எதிர்த்து ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!
கரீபியன் தீவான ஹைடியில் அந்நாட்டு ஜனாதிபதி, சர்வாதிகார போக்கை கடைபிடிப்பதாக கூறி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற மறுத்ததால் கோபமடைந்த எதிர்ப்பாளர்கள், தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்மேலும் படிக்க...
2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்?
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், பொது மேடையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு!
அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கானமேலும் படிக்க...
உலக நாடுகளின் கல்வியை பாதித்த கொரோனா – உலக வங்கியின் ஆய்வில் தகவல்
கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பேரிடராக உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது, கொரோனா எனும் பெருந்தொற்று. இந்த ஆட்கொல்லி வைரசுக்கு எதிரானமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் மோடி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். அத்துடன் தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாதமேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைகளில் பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் வழங்கப் படுவதில்லை!
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை என பெண் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் மகளிர் அபிவிருத்தி மையம் ஆகியவற்றுடன், இணைபங்குதாரராக “சேர்ச் போர் கொமன்மேலும் படிக்க...
7 வயதுச் சிறுவன் கொலை: மற்றொரு சிறுவன் படுகாயம்- கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனானமேலும் படிக்க...
சர்வதேசத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கி உள்ளது- ஸ்ரீதரன்
சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசாங்கத்தின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி. ஜனகா நீக்கிலாஸின் ‘நடுகை’ என்ற மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில்மேலும் படிக்க...