கேணல் சங்கீதன் – 8ஆம் ஆண்டு நினைவு நாள் !
கேணல் சங்கீதன் அண்ணாவின்
8ஆம் ஆண்டு நினைவு நாள் !
***********************
உன்னை தென்றல் கூட தழுவி
செல்ல நாணம் கொள்ளும் !
உன் புன்னகையை கண்டு வன்னி
மயில்களும் தோகை விரித்தாடும் !
தமிழீழத்தில் விசாரணை எனும் ஆயுதமேந்தி பல வேடம் பூண்டிருந்த ரெட்டை முகங்களை நேருக்கு நேர் ஆராய்ந்து உறுதிப்படுத்திய உன் மதி நுட்பங்கள் தான் எத்தனை எத்தனை?
தமிழுக்கு தனித்துவமும் கல்லூரி ஆசானாய் நீ இருந்து பல போராளிகளை பயிற்றுவித்தும் உன்ஆளுமையால் புலனாய்வு செய்து புலன்கள் யாவையும் செயலிழக்க செய்வதில் உனை மிஞ்ச யாருளரோ? உன் நெஞ்சில் எத்தனை இரகசியங்கள் அவை அத்தனையும் ஆழமாக உன்னோடு சுமந்து சென்ற வித்தகனே..
சங்கீதன் என்றாலே சதையே
நடுங்குமாம் விசாரணையின் உச்சத்தில்..
உன்னுக்குள் இருந்த ஆளுமையால்
மாத்தையா கூட அன்று மண்டியிட்டான்
மகிந்த எனும் கரியனின் உலகெல்லாம் வீரத்தையும் வெடிகுண்டையும் கடன் வாங்கி கொன்று
விட்டேன் என கேலிக் கூத்தாடிய நாளும் இதுவே !
எம் நினைவுகள் ஒடுக்கியே
கரங்கள் கூப்பியே ஒருகணம்
உங்கள் நினைவுகள் சுமந்து
கண்ணீர் பூக்களை காணிக்கை
ஆக்குகின்றோம்….
வீர வணக்கம்
- மார்ஷல் வன்னி