கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினர் சோதனை
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் கிளிநாச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சோதனை நடவடிக்கைகளை படையினர் முன்னுடுத்து வருகின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் படையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதனைத் தவிர அந்தந்த பாடசாலைகளும் தங்கள் பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
மேலும் படிக்க பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை!