காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி – ஜனாதிபதி!
தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்றே இராணுவத்திலும், காணாமல் போனோர் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையை சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை கண்டெடுக்க முடியாமல் போவதுடன், இராணுவத்திலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இதனை அரசியல் ரீதியான பிரச்சினையாக்கியுள்ளதே தற்போதைய பிரச்சினையாகவுள்ளதாகவும், தனக்கும் அது தொடர்பான அனுபவமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியிலும் இரகசிய முகாம்கள் குறித்து கூறப்பட்டதாகவும், எனினும் அவை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...