காங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க
காங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார்.
போபாலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் ஜோதிராதித்ய சிந்தியா மேலும் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் முதல்வர் அலுவலகத்தில், ஊழல் அரசையே நடத்தினார்கள்.
மேலும் துறைகளை ஒதுக்கீடு செய்வது குறித்து அதிகளவு கவனம் செலுத்தினார்களே தவிர மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் கூட கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் பொது நலனுக்காக சேவையாற்றாமல், அரசியல் செய்வதிலேயே ஆர்வம் காட்டினர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.