Main Menu

கொரோனா விலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் 78 இலட்சத்து 47 ஆயிரத்து 229 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

அதேபோன்று நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு கோடியே 34 இலட்சத்து 57 ஆயிரத்து 476 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து இலட்சத்து 81 ஆயிரத்து 221 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் உலகளவில் இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து 917 கொரோனா தொற்றாளர்கள் பாதிவாகியுள்ளதுடன், ஐந்தாயிரத்து 413 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 78 இலட்சத்து 41 ஆயிரத்து 591 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

அங்கு நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 65 ஆயிரத்து 594 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 935 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் காணப்படுகின்றது. அங்கு நேற்று மாத்திரம் 74 ஆயிரத்து 262 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...