கன்னத்தில் அறையப்பட்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு ஒருவன் கன்னத்தில் அறைந்துள்ளான். இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகலின் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Drôme மாவட்டத்துக்கு பயணித்திருந்தபோது அங்கு வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உணவை முடித்துக்கொண்டு அங்கு ஜனாதிபதிக்காக காத்திருந்தவர்களை அவர் சந்திக்க சென்றார். அப்போது பாதுகாப்பு வலையத்துக்கு மறுபுறம் நின்ற ஒருவர் ஜனாதிபதிக்கு ஒரு கையை கொடுத்துவிட்டு, மறுகையால் ஜனாதிபதியின் கையை அறைந்துள்ளார். உடனடியாக மெய் பாதுகாவலர்கள் ஜனாதிபதியை பாதுகாத்தனர். தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.