Main Menu

மக்ரோன் மீது தாக்குதல்! – அனைத்து கட்சி தலைவர்களும் கடும் கண்டனம்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, இம்மானுவல் மக்ரோன் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ”குடியரசு தலைவரை தாக்குவது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. முழு தேசமும் இத்தருணத்தில் ஜனாதிபதியுடன் உடன் இருக்கவேண்டும்!” என அவர் தெரிவித்தார்.  இச்சம்பவத்துக்கு மரீன் லூ பென் உடனடியாக எதிர்வினை ஆற்றியுள்ளார். அவர் தெரிவிக்கையில், “இதுபோன்ற தாக்குதல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. குடியரசு ஜனாதிபதியை உடல்ரீதியாக தாக்குதவது தார்மீகமற்றது” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  Hauts-de-France மாகாண ரீபபுளிகன் கட்சி நிர்வாகி Xavier Bertrand தெரிவிக்கையில், ”எந்த அரசியல் கருத்து வேறுபாடும் வன்முறையை நியாயப்படுத்தாது” என தெரிவித்தார். இம்மானுவல் மக்ரோன் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது!” எனவும் அவர் குறிப்பிட்டார்.  ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சியின் (ஓ மார்சே) துணைத்தலைவர் François Jolivet தெரிவிக்கையில், ”குடியரசின் ஜனாதிபதியைத் தாக்குவது குடியரசைத் தாக்குவதற்கு சமனாகும்!” என தெரிவித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.  ச்Jean-Luc Mélenchonட் கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான Jean-Luc Mélenchon தெரிவிக்கையில் “வன்முறை தீர்வாகும் என நீங்கள் நம்புகின்றீர்களா. நான் ஜனாதிபதி மக்ரோனுக்கு ஆதவாக நிற்கின்றேன்!” என தெரிவித்துள்ளார்.  இவர்களோடு மேலும் பல அரசியல் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

பகிரவும்...