ஐரோப்பிய தேர்தல் -கருத்துக் கணிப்பில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை
நெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 18% க்கும் அதிகமான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன என வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதம மார்க் ரூட்டின் கர்ச்சியான சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மக்கள் கட்சி பல சவாலை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மக்கள் கட்சி 15% க்கும் அதிகமான வாக்குகளையும் ஜனநாயக கட்சி 11% க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.