உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!
இந்தியாவில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்கிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நிலம் கையகப்படுத்தல், அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள், அரசு நிர்வாகம் போன்ற பல்வேறு காரணங்கள் முதலீட்டுக்கு தடையாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் போதுமான அளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதிலும் தற்போதையை சூழலில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.