Main Menu

உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!

உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து அதிகமானோர் குணமடையும் நாடுகளின் பட்டியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் உலகில் கொரோனாவிலிருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கையில் 19 சதவீதமானோர்  இந்தியர்கள் என சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக அமெரிக்காவில் 18.70 சதவீதம் பேரும், பிரேசிலில் 16.90 சதவீதமானோர் குணமடைந்துள்ளதாக ஆய்வாளர்களால் நடத்தப்படும் Worldometers இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.