உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவங்கள் – இதுவரை 2289 பேர் கைது!
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு 2 ஆயிரத்து 289 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஆயிரத்து 665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.