உயிரிழந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று சில இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சற்று முன்னர் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. இதனை தொடர்ந்து சபாநாயகரின் அறிவிப்புக்கள் சில இடம்பெற்றன.
இதன் போது ரணில் விக்கிரம சிங்க உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று சில இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தார். இதற்கமைவாக இன்று மௌன அஞ்சலி இடம்பெற்றது