உங்கள் ராசிக்கு எந்த கலர் உகந்தது?

ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. அதில் முக்கியமானது குறிப்பிட்ட நிறமானது இந்த ராசிக்கு உகந்தது என்ற விஷயம். இந்த 2017 வருடம் எந்த ராசிகாரர்களுக்கு எந்த நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என பார்க்கலாம்.

#மேஷம்
பொதுவாக தைரிய குணம் கொண்டவர்களாக விளங்கும் மேஷ ராசிகாரர்களின் ராசியை ஆளுவது செவ்வாய் கிரகம் தான். இவர்களுக்கு இந்த வருடம் இரத்த சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

#ரிஷபம்
சுக்ரன் ஆளும் ரிஷப ராசிகாரர்களுக்கு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பான பிங்க் நிறம் அதிர்ஷ்டம் தரும். இவர்கள் சிவப்பு நிறத்தை விட்டு விலகியிருப்பது நல்லது.

#மிதுனம்
மிதுனத்தை ஆளுவது புதன் கிரகமாகும். இந்த ராசிகாரர்களுக்கு பச்சை நிறம் பொதுவாக விருப்பமான நிறமாகும். இது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

#கடகம்
சந்திர கிரகம் ஆளும் கடக ராசிகாரர்கள் பொதுவாக மற்றவர்கள் மேல் அக்கரை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நீலம், வெள்ளை மற்றும் கடல் பச்சை இந்த வருடம் நன்மை பெயர்க்கும்.

#சிம்மம்
சூரியன் ஆளும் சிம்ம ராசிகாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் தங்க நிறம் அதிர்ஷ்டம் தரும். இவர்கள் முக்கியமான சந்திப்புகளுக்கு போகும் போது தங்க ஆபரணம் அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம்.

#கன்னி
கன்னி ராசிகாரர்களுக்கு இளம் ஊதா மற்றும் இளமஞ்சள் நிறம் இந்த வருடம் அதிர்ஷ்டம் தரும். வாரத்தில் புதன்கிழமை மட்டும் பச்சை நிறத்தில் உடையணிந்தால் கூடுதல் அதிர்ஷ்டம் தரும்.

#துலாம்
இந்த வருடம் வெள்ளி கிழமைகளில் இந்த ராசிகாரர்கள் பாதி வெள்ளையான கிரீம் நிற உடையணிந்தால் நல்லது. பொதுவாக இவர்களுக்கு நீல நிறம் பெரிய அளவில் அதிர்ஷ்டம் கொடுக்கும்.

#விருச்சிகம்
புதிய விஷயங்களை கற்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு சிவப்பு, ஊதா, பச்சை போன்ற நிறங்கள் அதிக அதிர்ஷ்டத்தை இந்த வருடங்கள் தருகிறது.

#தனுசு
எல்லா விஷயத்தை சர்வ சாதாரணமாகவும், சுலபமாகவும் எடுத்து கொள்ளும் இவர்களுக்கு மஞ்சள் நிறம் அதிக அதிர்ஷ்டம் தரும். முக்கியமாக வாரத்தில் வியாழன் கிழமைகளில் மஞ்சள் நிற உடை அணியலாம்.

#மகரம்
இந்த வருடம் மகர ராசிகாரர்களுக்கு சாம்பல், கருநீலம் மற்றும் நீல நிறம் நல்ல அதிர்ஷ்டத்தையும், உற்சாகத்தையும் தரும்.

#கும்பம்
தைரிய குணம் கொண்ட கும்ப ராசிகாரர்களுக்கு ஊதா நிறம் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்த வருடத்தின் சனிக்கிழமைகளில் கருமையான நீல நிற உடை அணிதல் நல்ல பலன் தரும்.

#மீனம்
ஊதா, வெள்ளை, இள மஞ்சள் போன்ற நிறங்கள் மீன ராசிகாரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டத்தையும் அதிக சந்தோஷத்தையும் தரும்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !