இலங்கையில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர்
இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று (14.05.2019) முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக், வட்ஸ் அப், வைபர், ஐ.எம்.ஒ.,ஸ்னப்சட், இன்ஸ்டர்கிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.