இரத்து செய்யப்படும் தேர்தல்
பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, இந்திய தேர்தல் ஆணையகம் நேற்று இரவு அறிவித்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரான அந்தகட்சியின் பொருளாளர் துரைமுருகனின் புதல்வன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக பிரதிநிதிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது கட்டமாக சோதனை நடத்தியதில், 11.48 கோடி ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் குறித்த தொகுதியில் தேர்தல் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்று அனுமதி அளித்ததையடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.