Main Menu

இனி அமெரிக்காவிற்கு பொற்காலம்.. அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வெற்றி உரை

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு  நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார். மேடைக்கு தனது மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோருடன் வந்த டிரம்ப்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இதுவாகும். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா இனி குணமாகும்.

அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். என்னை தேர்வு செய்த அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் கனவும் மெய்ப்படும். எனது அழகான மனைவி மெலானியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் எலான் மஸ்க்கும் கலந்துகொண்டார்.எலான் மஸ்க்கை குறிப்பிட்டு,  ஒரு நட்சத்திரம் உதயமாகிவிட்டதாக டிரம்ப் தனது உரையின்போது நெகிழ்ந்தார்.

பகிரவும்...
0Shares