Main Menu

இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான வர­லாற்றுக் கடமை பிரிட்­ட­னுக்கு உண்டு: பொரிஸ் ஜோன்­ச­னுக்­கான வாழ்த்துச் செய்­தியில் விக்­கி­னேஸ்­வரன்

ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் மனித உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தி, தமி ழர்­களின் பாது­காப்­பையும் நல­னையும் பேணு­வ­தற்கு இன்னும் காலம் பிந்­தி­வி­ட­வில்லை என்று பிரிட்­டனின் பொதுத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய பிர­தமர் பொரிஸ் ஜோன்­ச­னுக்கு  அனுப்பி வைத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கட்­சியின் ஸ்தாப­கரும், செய­லாளர் நாய­க­மு­க­மான நீதி­ய­சரர் சி.வீ.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

கொன்சர் வேட்டிவ் கட்­சியைச் சோந்த பிர­தமர் பொறிஸ் ஜோன்ச னின் தேர்தல் வெற்­றியை ஒட்டி அவ­ருக்கு அனுப்­பிய வாழ்த்துக் கடி­தத்தில் விக்­னேஸ்­வரன் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

அண்­மைய தேர்­தலில் வென்றமைக்கு எமது வாழ்த்­துக்கள்.

தங்­களின் கொன்­சர்­வேட்டிவ் கட்­சியைச் சேர்ந்த முன்­னைய பிர­தமர் டேவிட் கமரூன் கடை­சி­யாக இலங்­கைக்கு விஜயம் செய்­த­போது அவரைச் சந்­திக்கும் அதிர்ஷ்டம் கிட்­டி­யது. மிக விரை வில் வடக்கு மாகா­ணத்­துக்கு உங்கள் விஜ­யமும் இடம்­பெ­று­கின்­ற­மை­யையும் எதிர்­பார்த்து இருக்­கின்றோம்.

பிரிட்­டனில் வாழும் தமி­ழர்க ளின் உயர்ந்த நண்பர் நீங்கள் என்­பது நாட­றிந்த விடயம். இலங் கையிலும் பிரிட்­ட­னிலும் உள்ள தமி­ழர்கள் உங்கள் மீது நம்­பிக்கை வைத்­துள்­ள­மை­யுடன் உங்க ளிட­மி­ருந்து அதிகம் எதிர்பார்க் கின்­றனர்.

எங்கள் மக்கள் தங்கள் பாரம் பரிய பூமியில் இடம்­பெறும் அரச அடக்­கு­முறை, இரா­ணுவ ஆக்­கிர மிப்பு, சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்கள் போன்­ற­வற்­றாலும் அவற்றின் விளை­வு­க­ளி­னாலும் தொடர்ந்து பாதிக்­கப்­பட்டு அல்­லல்­பட்டு வரு கின்­றனர்.

இலங்­கையில் இனப்­பி­ரச்சி னையைத்  தீர்த்து, மனித உரிமை மீறல்­க­ளுக்கு முடிவு கட்டும் வர லாற்றுப் பொறுப்பு பிரிட்­ட­னுக்கு உண்டு.

பிரிட்­டனின் கால­னித்­துவ நாடாக்­கப்­பட்­ட­வற்றுள் இலங்கை யும் ஒன்று. 1833இல் இங்கு பிரிட்­டனால் மேற்­கொள்­ளப்­பட்ட நிர்­வாக மாற்­றங்­களே இலங்­கையில் இனப்­பூ­சல்கள் ஏற்­படக் கார ணம் என்­பது பொது­வாக நம்பப் படு­கின்­றது.

அந்தக் காலம் வரை தனி நாடாக இருந்த வடக்கும் கிழக்கும், எஞ்­சிய சிங்­களப் பெரும் பான்மைப் பிர­தே­சத்­துடன் இணைக்­கப்­ப­டாமல் தொடர்ந்து சுய­நிர்­ணய உரி­மை­யுடன் இருக்க அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கு­மானால் இந்த நாட்டின் இனப்­பூ­சல்­களை நாம் தவிர்த்­தி­ருக்­கலாம்.

ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்து வதன் மூலம் மனித உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தி, தமி­ழர்­களின் பாது­காப்பு நலனைப் பேணு­வ­தற்கு இன்னும் காலம் கடந்­து­விட வில்லை.

இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறல், நீதி நட­வ­டிக்கை, மீள்  நல்­லி­ணக்கம் ஆகி­ய­வற்றைத் தூண்டித் துலங்கச் செய்­வதற் கான அவ­சி­யத்தை, பிரிட்­டனில் உள்ள தமிழ் மக்­க­ளுக்குத் தேர்த லுக்கு முன்­ன­ரான செய்­தி­யாக நீங்கள் விடுத்­த­மையை நாம் நினைவு கூர­வி­ரும்­பு­கின்றோம்.

இங்கு இடம்­பெற்­ற­வை­யாகக் கூறப்­படும் மனித உரி­மைகள் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக முழு அள­வி­லான சுயா­தீன  சுதந்திர விசாரணைகளை நடத்துமாறு 2013இல் இலங்கைக்கு விஜயம் செய்த உங்களின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இங்கு இலங்கைக்கு அரசை வலியுறுத் தியமையை நான் இச்சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.  

பகிரவும்...