இத்தாலிய அதிகாரியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் அமெரிக்க இளைஞர்கள் கைது!
இத்தாலியின் ரோம் நகரில் வைத்து அதிகாரியொருவரை கண்மூடித்தனமாக தாக்கிக் கொலை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் ஔிப்படம் சமூகவலைத்தளங்களில் வௌியானமை தொடர்பில் இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 18 வயதான, கெப்ரியல் கிறிஸ்டியன் நடாலி ஜோர்த் என்பவரின் ஔிப்படம் இத்தாலிய ஊடகங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காண்பிக்கப்பட்டது. நடாலி ஜோர்த் மற்றும் அவரது நண்பரான 19 வயது மதிக்கத்தக்க பின்னேகன் லீ எல்டர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோம் நகரில் வைத்து மரியோ சேர்செய்லோ ரெகா என்ற பொலிஸ் உத்தியோத்தரை கடந்த வௌ்ளிக்கிழமை கொலை செய்ததாக இளைஞர்கள் இருவர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ரெகா, உயிரிழப்பதற்கு முன்னர் கடுமையாக மற்றும் கண்மூடித் தனமாக தாக்கப்பட்டுள்ளதாக மரண விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் நடவடிக்கையை முறியடிப்பதற்கு சென்றிருந்த அவரின் முயற்சி ஈடேறாத நிலையில், எட்டு முறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த குறித்த இரண்டு மாணவர்களும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் நடாலி ஜோர்த்தின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆசனமொன்றில் அமரவைக்கப்பட்டிருக்கும் ஔிப்படமே ஊடகங்களில் வௌியாகியுள்ளது.
பகிரவும்...