ஆறுமாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய பிரெஞ்சு விண்வெளி வீரர்கள்!
ஆறு மாதங்களின் பின்னர் பிரெஞ்சு விண்வெளி வீரர் Thomas Pesquet மற்றும் அவரது குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
பிரான்ஸ் நேரப்படி, அதிகாலை 4.25 மணிக்கு SpaceX விண்கலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வந்தடைந்தது. பிரெஞ்சு வீரர் Thomas Pesquet, அமெரிக்க விண்வெளி வீரர்கள் Shane Kimbrough, Megan McArthur மற்றும் ஜப்பானிய வீரர் Akihiko Hoshide ஆகியோரும் பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தனர்.
கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு புறப்பட்ட இவர்கள், ஆறு மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்தனர். அதன்பின்னர் தமது குடும்பத்தினரை காண அவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
நன்றி : Visactu, BFM tv, NASA